கல்வி அதிகாரிகள், அதிபர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை!

Sunday, December 17th, 2017

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் இலங்கை கல்வி நிர்வாக சேவை இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்தோர் வேட்பாளராக நிற்க முடியாது என பொது நிர்வாக அமைச்சின் சுற்று நிருபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் 32.2017 ஆம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைய இலங்கை கல்வி நிர்வாக, இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்தோர் கல்வித் துறையில் பதவி நிலை அலுவலர்கள் என்ற வகுதிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட வகுதியனர் சேவையில் இருந்து கொண்டு சம்பளமற்ற விடுமுறையை பெற்று தேர்தல்களில் போட்டியிட முடியாது.

எனினும், சேவையில் இருந்து ஓய்வு பெற்று தேர்தலில் வேட்பாளராக போட்டியிட முடியும். மிகை ஊழியர் அடிப்படையில் இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்தோர் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட முடியும். இவர்களுள் இலங்கை அதிபர் சேவையில் இருந்து இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு மிகை ஊழியர்கள் அடிப்படையில் நியமனம் பெற்றவராயின், தேர்தலில் போட்டியிட முடியாது. ஆசிரியராக இருந்து அச்சேவைக்கு மிகை ஊழியர் அடிப்படையில் நியமிக்கப்பட்டிருப்பின் தேர்தலில் போட்டியிட முடியும்.

Related posts: