கலைப்பீடத் தடை நீக்கப்படும் கூட மாணவர்கள் விரிவுரைக்கு வரவில்லை  – யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்!

Saturday, January 20th, 2018

யாழ் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புத்தடைகள் நேற்று நீடிக்கப்பட்டிருந்த போதிலும் நேற்று மாணவர்கள் எவரும் வகுப்புகளுக்கத் திரும்பவில்லை என யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மூன்றாம் ,நான்காம் வருட மாணவர்களுக்கிடையில் இடம் பெற்ற மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர் .

இந்நிலையில் இந்த இரண்டு வருட வகுப்பகளும் நேற்று முன்தினம் வரை பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருந்தது இந்த மோதலில் சம்பந்தப்பட்ட ஏழு மாணவர்கள் தவிர்ந்த ஏனைய ழூன்றாம் நான்காம் வருட மாணவர்களுக்கான வகுப்புத்தடைகள் நேற்று முதல் நீக்கப்படுவதாக நேற்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது

இந்த நிலையில் நேற்று கலைப்பீடத்தின் மூன்றாம் நான்காம் வருட வகுப்புகளுக்கான விரிவுரையாளர்கள் சென்றிருந்த போதிலும் மாணவர்கள் எவரும் சமூகமளிக்கவில்லை

இவ் விடயத்தில் இரு தரப்பு மாணவர்களிடமும் பேசி தீர்வென்றை எட்டுவதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வார் எனப் பல்கலைக்கழக  மாணவர் ஒன்றியத்தின் கடிதம் ஒன்றின் மூலம் தமக்குத் தொரியப்படுத்தியிருக்கின்றனர் எனப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஊடகங்களுக்குத் தகவல் வெளியிட்டார்.

Related posts: