வெளிநாட்டிலிருந்து வருவோர் தொடர்பில் புதிய நடைமுறை – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Friday, March 19th, 2021

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோர் தொடர்பில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கு ஹோட்டல்களில் தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் வெளிநாட்டிலிருந்து வரும் நபர்களின் பி.சி.ஆர் சோதனைகள், அத்துடன் வந்த நாளில் எடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையின் படி அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

வீடு சென்ற பின்னர், அப்பகுதியின் சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, மீதமுள்ள 7 நாட்களை வீட்டில் செலவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் செயல்முறையை புதுப்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு வரும் இலங்கை குடிமக்கள் / இரட்டை குடியுரிமை கொண்டோர் அல்லது வெளிநாட்டினர் விமான நிலையத்தில் தடுப்பூசி தொடர்பான சான்றிதழின் அசல் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர் அவர்கள் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 24 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

பி.சி.ஆர் அறிக்கையின் முடிவுகளின்படி, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

அதேநேரம் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து தங்கள் வீடுகளுக்குச் செல்ல பயண ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

வீடு திரும்பிய பின்னர் அப்பகுதிக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றுமு; வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் தடுப்பூசி போட்டு பி.சி.ஆர் பரிசோதனையில் தப்பியவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட தேவையில்லை என்றும் வீட்டிற்கு வந்து 7 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இந்திய மீனவர்கள் 23 பேரும் நிபந்தனையுடன் விடுதலை - சொத்துக்கள் பறிமுதல் – பருத்தித்துறை நீதிமன்று உ...
அபாயகர பிரதேசங்களில் வசிக்கும் 12 ஆயிரம் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை – ...
அவுஸ்திரேலியா புதிய பிரதமருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வாழ்த்து - இணைந்து பணியாற்றவும் முனைப்பு க...