கனிய எண்ணெய் சேவையாளர்களிடம்  ஜனாதிபதி வேண்டுகோள்

Wednesday, July 26th, 2017

அன்றாட செயற்பாடுகளை முடக்கும் செய்ற்பாடுகளை தவிர்த்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்தை புரிந்துகொண்டும் பணிக்கு திரும்புமாறு, கனிய எண்ணெய் சேவையாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எரிபொருள் விநியோக நடவடிக்கைளை அத்தியாவசிய சேவையாக நேற்று நள்ளிரவு முதல் அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. எரிபொருள் விநியோக நடவடிக்கையில் இணைந்துகொள்ளாத தனியார் எரிபொருள் பௌசர்களின் அனுமதிப்பத்தித்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், எரிபொருள் விநியோக நடவடிக்கை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்பட்டுள்ள நிலையில், பணிக்கு திரும்பாத கனிய எண்ணெய் சேவையாளர், பணியில் இருந்து தாமாகவே விலகியதாக கருதப்படுவர் என, அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்நிலையில், ஊழியர்களை பணிக்கு திரும்புமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்

Related posts: