இலங்கையில் கொவிற் தொற்றாளர் எண்ணிக்கையுடன் உயிரிழப்புகளும் தொடர்கிறது!

Thursday, June 24th, 2021

24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 196 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் 2 ஆயிரத்து 178 பேர் சிறைச்சாலை கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 18 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.

இதன்படி நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 46 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது.

அதேநெரம் கொவிட் தொற்றிலிருந்து நேற்று ஆயிரத்து 890 பேர் குணமடைந்து சிகிச்சை மையங்களிலிருந்து வெளியேறிதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி கொவிட் தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 11 ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது. மேலும்  32 ஆயிரத்து 219 பேர் தொடர்ந்தும் சிகிச்சை  பெற்றுவருகின்றனர்.

அதேவேளை கடந்த 22 ஆம் திகதி மேலும் 65 கொவிட் மரணங்கள் இடம்பெற்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளரால் உறுதிப்படுத்தப்பட்டு அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் பதிவான மரணங்களுள் 30 வயதுக்கு குறைவான பெண் ஒருவரும், ஆண் ஒருவருமாக 2 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடையில் 4 பெண்களும், 6 ஆண்களுமாக 10 பேர் மரணித்துள்ளனர்.

அதேநேரம் 60 வயதுக்கு மேற்பட்ட 20 பெண்களும், 33 ஆண்களுமாக 53 பேர் மரணித்ததாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 769 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: