குடாநாட்டில் சிறுவர் வன்முறை 8 சதவீதத்தினால் அதிகரிப்பு – யாழ்.அரச அதிபர் தகவல்!

Saturday, October 15th, 2016

பெற்றோர்களுக்கு அக்கறை இன்மையின் காரணமாக யாழ்.மாவட்டத்தில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு முகம் கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தள்ளார்..

யாழ்.மாவட்ட சிறுவர் நன்னடத்தை பராமரிப்பின் ஏற்பாட்டில் சிறுவர்களின் நலன்களின் எதிர்கால செயற்றிட்டம் என்னும் கருப்பொருளிலான சிறுவர்கள் மேம்பாட்டு தொடர்பான கலந்துரையாடல் நேற்று முன்தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தலமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

கடந்த ஆண்டிணைவிட தற்போது 08 சதவீதத்தினால் சிறுவர் வன்முறை சம்பவங்கள் யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட சிறுவர் நன்னடத்தைப் பராமரிப்பு பிரிவின் புள்ளி விபரத்தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த ஆண்டு 48 சிறுவர் சிறுமிகள் துன்புறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் இவ்வாண்டு அது 60 பேராக அதிகரித்துள்ளது. யாழ்.மாவட்டத்தில் சிறுவர்கள் தொடர்பான வன்முறைச் சம்பவங்களை தடுக்கும் விசேட செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. என்றும் அவர் தெரிவித்தார்.

vethanayakan-720x480

.

Related posts: