கட்டாரில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் பிரச்சினையா?

Wednesday, June 7th, 2017

கட்டார் நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொள்வதாக மத்திய கிழக்கை சேர்ந்த 6 நாடுகள் அறிவித்துள்ளன.

சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு கூட்டமைப்பு, யெமன் மற்றும் லிபியா ஆகிய நாடுகள் இவ்வாறு இராஜதந்திர உறவுகளை துண்டித்துள்ளன.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு நேரடியாக உதவி செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ஆறு நாடுகளும் இந்த முடிவை எடுத்துள்ளன.கட்டாரில் கிட்டதட்ட 1,25000 இலங்கையர்கள் தொழில் வாய்ப்புக்காக அங்கு சென்றுள்ளனர்.

கட்டாரில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக, அங்கு வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாயக்கவிடம் வினவிய போது, கட்டார் அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை அந்த நாட்டின் உள்ளக பிரச்சினையாகும்.கட்டார் நாட்டில் 1,25000 இலங்கையர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலைமையினால் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: