கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய சட்டம் !

Thursday, June 1st, 2017

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் புதிய பாதுகாப்பு நடைமுறை அமுலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய விமான நிலையத்திற்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இந்த நடைமுறை செயற்படுத்தப்படுவதாக விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்தின் முகாமையாளர் எச்.எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

புதிய பாதுகாப்பு நடைமுறைக்கமைய விமான பயணி ஒருவர் தங்கள் கைப்பையினுள் கொண்டு செல்ல கூடிய திரவ வகை, ஸ்ப்ரே வகை மற்றும் ஜெல் வகைகளின் அளவுகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீர், பான வகைகள், சுப், ஜேம், சோஸ், திரவ வகைகள், க்ரீம், மருந்துகள், எண்ணெய், வாசனை திரவியம், ஸ்ப்ரே, ஜெல் வகைகள், காற்று அழுத்தம் அதிகமாக கொடுக்கும் கொள்கலன்கள், சவரநுரை வகைகள், வேறு நுரை வகைகள், கண் இமைக்கான அழகு சாதன வகைகள், அறை வெப்பங்களை பராமரிக்கும் திரவங்கள், நீராவி திரவ வகை பொருட்கள் இதற்குள் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய குறித்த அனைத்து பொருட்களும் ஒரு லீற்றருக்கு மேல் அதிகரிக்க கூடாது. அத்துடன் திரவத்திலான கொள்கலன்கள் 20X20 என்ற அளவில் வெளிப்படையாக தெரியும் வகையிலும் மீண்டும் மூடிக்கொள்ள கூடிய பொலித்தீன் பைகளில் மூட வேண்டும். ஒரு பயணியினால் அந்த பை ஒன்று மாத்திரமே கொண்டு செல்ல முடியும்.

இதற்கு மேலதிகமாக கொண்டு செல்லும் திட்டம் இருந்தால் அவற்றினை விமான டிக்கட் ஒப்படைக்கும் இடத்தில் ஒப்படைக்கப்படும் பயண பைகளுடன் எடுத்து செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

ஏப்ரல் 21 தாக்குதல் பெயரில் பணமோசடி - அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை!
பொதுப்போக்குவரத்தில் பயணித்து வடக்கு மாகாணத்துக்கு திரும்பும் பலருக்கு வடக்கில் கொரோனா தொற்று – சுகா...
பணம் வழங்கும் காலம் அடுத்த வாரத்துக்குள் அறிவிக்கப்பட்டால் மட்டுமே உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்...