கடற்றொழிலாளர் பற்றிய தொகை மதிப்பீடு!
Tuesday, March 20th, 2018
2018 ஆம் ஆண்டில் கடற்றொழிலாளர் பற்றிய முறையான தொகை மதிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதற்கான ஆலோசனையை கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர வழங்கியுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனிடையே இலங்கையில் 1976 ஆம் ஆண்டு முதல் தடவையாக மீனவர்கள் தொடர்பான தொகை மதிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பின்னர் 42 வருடங்களாக தொகை மதிப்புமேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் சரியான தரவுகளை சேகரிக்க தொகை மதிப்பை மேற்கொள்வது அவசியமாகும் என்றும் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் விபரம் குடும்ப வருமானம், வாழ்க்கைத்தரம்போன்றவற்றை அறிந்து கொள்ள இது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் – பிரதமர் மஹிந்த தெ...
இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதி - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
தென்கிழக்கு ஆப்பிரிக்க மொசாம்பிக் கடற்கரையில் படகு விபத்து - 90 பேர் உயிரிழந்தனர் தகவல்!
|
|
|
பலஸ்தீனுடனான நட்புறவுக் கொள்கையில் எந்தவகையிலும் மாற்றமேற்படாது - வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி...
வரவு - செலவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவை வழங்கும் -...
நாடு முழுவதும் தற்போது நிலவும் பலத்த காற்று நிலைமை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக குறைவடையலாம் - வ...


