வரவு – செலவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவை வழங்கும் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளிப்பு!

Thursday, November 16th, 2023

2024ஆம் நிதிண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு பொதுஜன பெரமுன தமது முழுமையான ஆதரவை வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரசாங்கத்துடன் தொடர்புடைய அரசியல் கட்சி என்பதை வலியுறுத்திய மஹிந்த ராஜபக்ஷ, வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதை தடுக்கும் வகையில் பொதுஜன பெரமுன செயல்படாது என்றும் சுட்டிக்காட்டினார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று இரவு வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிலையில், வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நேற்றுமுன்தினம் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியிருந்ததாவது, – வரவு – செலவு திட்டத்தில் மக்களுக்கு பயன்தரும் விடயங்கள் எதுவும் இல்லை. அதனால், வரவு – செலவு திட்டத்தை தோற்கடிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. வரவு – செலவு திட்டத்தில் உள்ள முரண்பாடுகளை கண்டறிந்து அவற்றைச் சுட்டிக்காட்டுவது நமது கடமையாகும்.

பிரச்சினை வரவு – செலவுத் திட்டத்திலோ அல்லது அதன் திட்டங்களிலோ இல்லை. அதைச் செயல்படுத்துவதில்தான் உள்ளது.

வரவு – செலவுத் திட்டம் மோசமானதொன்றல்ல. ஆனால் பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் முறையாக செயல்படுத்தப்படாததுதான் பிரச்சினை. இந்த பட்ஜெட்டில் பல முன்மொழிவுகள் கடந்த ஆண்டு பட்ஜெட்டிலும் முன்மொழியப்பட்டது. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து

000

Related posts:


வாகன இறக்குமதியை நிறுத்தியதன் மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதியை சேமிக்க முடிந்துள்ளது ...
இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று – நான்காவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு பொது சுகா...
சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நோக்கத்தை விரிவுப்படுத்த இந்திய - இலங்கை நாடுகள் முயற்சி - இலங்கைக...