கச்சாய் வீதியில் இரவில் நடமாட அச்சம் நிலவுகின்றது – பிரதேச மக்கள் கவலை!

Tuesday, December 19th, 2017

சாவகச்சேரி நகர எல்லைக்குட்ப்பட்ட கச்சாய் சாலையில் தெரவிளக்ககள் பழுதடைந்த நிலையில்  ஒளிராமல் இருப்பதால் இரவு வேளைகளில் நடமாட அச்சம் நிலவுகின்றது என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரி நகரசபை எல்லைக்கட்ப்பட்ட கச்சாய்ச்சாலை சுமார் 3 கிலோமீற்றர் நீளமுடையது. அதில் ஒருகிலோமீற்றர் தூரம் வரை தெருவிளக்ககள் ஒன்றுவிட்ட ஒரு கம்பங்களில் பொருத்தப்பட்டன. எஞ்சிய பகுதிகளில் முக்கியமான பகுதிகளில் மட்டம் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

அவற்றில் பெரம்பாலான இடங்களில் பொருத்தப்பட்ட தெருவிளக்ககள் பழுதடைந்த நீண்ட காலமாகியும் இன்னும் பொருத்தப்படவில்லை. இருளாக உள்ளன. சாவகச்சேரி நகரிலிருந்து கச்சாய் சாலை வழியாக கச்சாய் மற்றம் கெற்பேலிஇ பாலாவி  விடத்தற்பளை  கிளாலி பொன்ற இடங்களுக்குச் செல்வோர் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

அத்தடன் பிரதேசக்குடியிரப்பாளர்கள் கட்டட வேலைகளுக்காக சாலையோரத்தில் கற்கள் பதித்து வைத்துள்ளனர். இதனால் இருளான வேளைகளில் சைக்கிள்களில் செல்வோர் கற்களில் மோதி விழுந்த பாதிப்புக்க உள்ளாகின்றனர்.

மேலும் சாலையின் இரு இடங்களில் கள்ளுத்தவறணை உள்ளதால் பெண்கள் இரவுவேளையில் சாலையில் செல்வதற்க உறிவினரின் உதவியை நாடவெண்டியுக்கது. கச்சாய் சாலையானது சாவகச்சேரி நகரசபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபைகளின் எல்லைகளைக்கொண்டுள்ளது. இரு சபையினரும் இணைந்து பயணிகளின் நன்மை கருதி இரவில் போக்குவரத்தச் செய்யக்கூடிய வகையில் விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.

இது தொடர்பாக இரு உள்@ராடசி சபைகளிடம் தொடர்பு கொண்ட பொது இந்த வருடத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட தெருவிளக்குகள் பொருத்தும் பணிகளை நிறைவடைந்துள்ளதால் அடத்த வருட செயற்றிட்டத்தில் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றப்படும் எனத்தெரிவித்தனர்.

Related posts:


அச்சுறுத்தல் விடுத்தது நிரூபிக்கப்பட்டால் உறுப்புரிமையிலிருந்து விலகத் தயார் - அமைச்சர்  ரவி!
அமெரிக்கா தனது விருப்பங்களை இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீது திணிக்காது - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அ...
சுற்றுலாத்துறைசார் நிறுவனங்களுக்கான சலுகைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிக்க அமைச்சரவை அனு...