கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை அகதிகளுக்கு அனுமதி மறுப்பு!

Wednesday, January 31st, 2018

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகள் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா பெப்ரவரி மாதம் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்தத் திருவிழாவில் வருடாந்தம் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்கின்றமை வழமையாகும்.

கச்சதீவு செல்வதற்கு தமிழக பக்தர்கள் பொலிஸ் அனுமதி மற்றும் மத்திய அரசின் ஆதார அட்டை ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த ஆலொசனைக் கூட்டம் இராமேஸ்வரத்தில் நடைபெற்றதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக அகதி முகாம்களில் வசித்து வருகின்ற இலங்கை அகதிகள் திருவிழாவில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்காதிருக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts:


குற்றச்சாட்டுகள் உரிய விசாரணைகள் மூலம் நிரூபிக்கப்பட்டால் தராதரம் பாராது தண்டனை வழங்கப்படும் - வர்த்...
வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும் - சிவில் விமான சேவைகள் அதிகாரசப...
கடவுச்சீட்டு வழங்குவதில் புதிய நடைமுறை - இன்றுமுதல் நாளொன்றுக்கு 3,500 கடவுச்சீட்டுகள் வழங்க குடிவர...