பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை – வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் அறிவிப்பு!

Friday, October 2nd, 2020

கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் பரந்தன் பூநகரி வீதியூடாக நாளை மூன்றாம் திகதி தொடக்கம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, அனைத்து வகையான போக்குவரத்துக்களுக்கும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும்  அவர் அறிவித்துள்ளார்.

பரந்தன் பூநகரி வீதியில் பரந்தனிலிருந்து 12 ஆவது கிலோ மீற்றருக்கு அண்மையாக உள்ள 11/5 இலக்க இரும்பு பாலம் ஒன்றில் ஏற்பட்ட திருத்த வேலைகள் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு கிளிநொச்சி வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் திருத்தப்பணிகள் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு இடம்பெறும் எனவும்,

இக்காலப்பகுதியில் துவிச்சக்கர வண்டி உள்ளிட்ட எந்த எந்த வாகனங்களும் குறித்த வீதியினை பயன்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: