ஓய்வூதியத் தொகையையும் அதிகரிப்பதற்கு அரசு திட்டம்!

Tuesday, August 14th, 2018

2020 ஆம் ஆண்டளவில் ஆக அடிமட்டத்தில் இருக்கும் அரச அலுவலக உதவியாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை ரூபா 8 ஆயிரமாக அதிகரிக்கவுள்ளதாக வீட்டு நிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வு கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் –

தினேஸ் குணவர்தன 2014 ஆம் ஆண்டளவில் குறிப்பிடப்பட்ட இந்த அரச அலுவலக உதவியாளர்களின் அடிப்படைச் சம்பளம் ரூபா மூவாயிரமாக இருந்தது. அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா உயர்வுக்குச் சமனாக ஓய்வூதியத் தொகையும் அதிகரிக்கவுள்ளதாக கூட்டு எதிரணியின் குழுத் தலைவர் தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பினார்.

அரச சேவையாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வின் ஒரு பகுதியான ரூபா 3 ஆயிரத்து 500 மட்டுமே ஓய்வூதியக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால் பெரும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். அவர்களுக்கு மிகுதி 6 ஆயிரத்து 500 ரூபாவையும் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

அமைச்சர் அபேவர்தன பதிலளிக்கையில், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இந்த வேதன உயர்வு வழங்க விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

2016 ஆம்ஆண்டு அரச ஊழியருக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வுக்குச் சமனான சம்பள உயர்வை ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கவுள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது சுமார் 600,000 பேர் ஓய்வூதியம் பெறுவோராக உள்ளனர் எனவும் தங்களின் அரசு ஆட்சிக்கு வந்தபோது அரச சேவையாளர்களின் வேதனம் 420 பில்லியனாக இருந்தது எனவும் தற்போது அது 620 பில்லியன் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் இலங்கையின் சரித்திரத்திலேயே இதுதான் முதன்முறையாக மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான சம்பள உயர்வு இந்த அரசினாற்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

Related posts: