ஒக்டோபர் மாத இறுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் !
Saturday, August 19th, 2017
எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிடும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்காக வேண்டி உள்ளுராட்சி சபைகள் தொடர்பிலான சட்ட மூலத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.
வர்த்தமானி அறிவித்தலின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு தனது அறிவித்தலை விடுக்கும். பெரும்பாலும் ஜனவரி ஆரம்பத்தில் தேர்தல் இடம்பெறலாம் எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
Related posts:
நாளை தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம்..!
இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 3.1 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு - மத்திய வங்கியின் ஆளுநர் அஜ...
அரச வங்கி கணக்கொன்றிலுள்ள 2 மில்லியன் டொலர் பணத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் மீளப் பெற்றுக்கொள...
|
|
|


