ஒக்டோபரில் மூன்று மாகாண சபைகளின் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல்!
Monday, July 3rd, 2017
மூன்று மாகாண சபைகளின் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாகஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்
இதற்கமைய, வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றதுகுறித்த மூன்று மாகாணங்களுக்கான பதவிக் காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடையவுள்ளன
அரசியல் அமைப்பு சரத்துக்களின் பிரகாரம் உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் பிற்போடப்பட்டிருந்தாலும், மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான சட்ட ஏற்பாடு, அரசியல் அமைப்பில் காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்
Related posts:
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையில் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு உதவக்கூடிய விடயம் எ...
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த முடியும் - உளவியல் மருத்துவ நிபுணர் நீல் பெ...
உள்நாட்டு வருவாய் திருத்தம் சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகரிப்பு!
|
|
|


