எலிக்காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள் வழங்கல்!

Monday, December 31st, 2018

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எலிக்காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாக பிராந்திய தொற்று நோய் பொறுப்பு மருத்துவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் குடிமனைகளில் வெள்ளம் நிரம்பியுள்ளதால் மக்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சுகாதார தேவைகள் மாவட்ட சுகாதார துறையினரால் முன்னெடுக்கப்பட்டன.

தற்போது வெள்ளம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மக்கள் தமது இருப்பிடங்களுக்குச் செல்கின்றனர்.

வெள்ளம் ஏற்பட்டமையினால் எலிக்காய்;ச்சலுக்கான தாக்கம் அதிகரித்து காணப்படும் என்பதால் மக்களுக்கான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வழங்கப்படும் உரிய குளிசையினை சாப்பிட்ட பின்னர் இரண்டு குளிசைகளை எடுக்க வேண்டும் எனவும் குளிசை குடித்தவுடன் வாந்தி மற்றும் குமட்டல் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அதனை நிறுத்துவதற்கு ஒரு குவளை நீர் அருந்த வேண்டும். அதனை அடுத்து ஒரு வாரத்தின் பின்னர் மீண்டும் இரு குளிசைகள் எடுக்க வேண்டும் என பொறுப்பு மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

Related posts: