எரிபொருள் விலைக்கான அதிகரிப்பு குறித்து கருத்து!

Sunday, July 15th, 2018

எரிபொருளுக்கான வரியை குறைத்தால் எம்மால் எரிபொருளின் விலையை குறைக்க முடியும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

இராணுவ வீரர் நினைவுச் சின்னத்தை திறந்து வைக்கும் விழாவில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“நான் மக்களுக்காகவே எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்தேன். நாம் எரிபொருள் விலை அதிகரிக்க தீர்மானம் எடுக்கும் போது பொதுமக்களை கவனத்திற் கொண்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும். பெற்றோலிய கூட்டுத்தாபனமானது பொதுமக்களுக்கு சேவை வழங்கும் நிறுவனமாக இருக்க வேண்டுமே தவிர இலாபமீட்டும் நோக்குடன் செயற்படக் கூடாது.” எனத் தெரிவித்தார்

Related posts: