எரிபொருள் விநியோகத்தில் படையினர்!

Wednesday, July 26th, 2017

கனிய எண்ணெய் விநியோக சேவைகள் அத்தியாவசிய தேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ கையெழுத்திட்டு அந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதில் பெற்றோலிய உற்பத்தி மற்றும் திரவ வாயு என்பற்றின் விநியோகப் பணிகள் அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளன.கனிய எண்ணெய் சேவையாளர் இன்றைய தினம் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் பணியில் இருந்து தாமாகவே விலகியதாக கருதப்படுவர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், எரிபொருள் சேவை அத்தியாவசியப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை விநியோக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தொடர்பு கொள்ளவுள்ளது.இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்படி பிரதான எரிபொருள் விநியோக களஞ்சிய சாலைகளான முத்துராஜவெல மற்றும் கொலனாவை பகுதிகளுக்கு இராணுவம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எரிபொருள் விநியோக நடவடிக்கைகளின் முதற்கட்டமாக, தற்போது போராட்டத்தில் பங்குபற்றாத கனிய எண்ணெய் சேவையாளர்களின் ஒத்துழைப்புடன் இந்த பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன் அடுத்தக்கட்டமாகவே இராணுவம் இந்த பணிகளை நேரடியாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள கனிய எண்ணைப் பணியாளர்கள், கொலன்னாவை எண்ணெய் களஞ்சிய சாலைக்கு முன்னால் போராட்டம் ஒன்றை நடத்த தயாராகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த களஞ்சிய சாலையில் இருந்து தாங்கள் பலவந்தமாக இராணுவத்தால் வெளியேற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்

Related posts: