எண்ணை தொட்டி விவகாரம் வலுக்கிறது தொழிற்சங்க எதிர்ப்பு

திருகோணமலை எண்ணெய் தொட்டகளை இந்திய எண்ணெய் நிறுவனமான ஐ.ஓ.சிக்கு வழங்கும் நடவடிக்கைக்கு இலங்கை பெட்ரோலிய கூ ட்டுஸ்தாபன தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.இந்தியா, சீனா அல்லது வேறு யாருக்கு கொடுக்கப் பட்டாலும் அதனை எதிர்த்து நாம் போரடுவோம் என கூ ட்டுஸ்தாபன தொழிற்சங்கங்க வட்டாரங்கள் தெரவித்தன.
1930 களில் கட்டப்பட்ட, நாட்டிற்கு பெரும் லாபத்தை ஈட்டும் இந்த எண்ணெய்த் தொட்டிப் பண்ணை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கே வழங்கப் படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2003ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஓர்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிபடையில் மொத்தமுள்ள 102 டாங்கிகளில் 99 டாங்க்களை இந்தியன் ஒயில் நிறுவனத்திற்கு ஒப்படைக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் 6 மாதங்களுக்குள் குத்தகை உடன்படிக்கை கையொப்ப மிடப்பட வேண்டும். ஆனால் இதுவரை அத்தகைய ஒப்பந்தம் கையெழுத்திடப் படவில்லை, இருப்பினும், ஐ.ஓ.சி. 2013 ல் இருந்து 16 டாங்க்களைப் பயன்படுத்துகிறது இது எப்படி சாத்தியம் எனவும் இலங்கை பெட்ரோலிய கூ ட்டுஸ்தாபன தொழிற் சங்கங்கள் கேள்வி எழுப்பி உள்ளன.
Related posts:
|
|