யாழில் மூன்று வர்த்தகர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா அபராதம் – யாழ். நீதவான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Friday, August 5th, 2022

யாழில் அரிசியின் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த இரு வர்த்தகர்களும், சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவரும் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புகொண்டமையை அடுத்து மூவருக்கும் தலா ஒரு இலட்ச ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனைகளை நடாத்தி , அரிசியை நிர்ணய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த இரு வர்த்தகர்கள் மற்றும் எரிவாயு சிலிண்டரை பாவனையாளருக்கு வழங்காது பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் என மூவருக்கு எதிராக தனித்தனியாக நீதிமன்றில் வழங்கு தாக்கல் செய்தனர்.

குறித்த வழக்கு விசாரணைகளின் போது வர்த்தகர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டமையை அடுத்து , மூவருக்கும் நீதிமன்று தலா ஒரு இலட்ச ரூபாய் தண்டம் அறவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: