ஊழியர்களின் கடமை நேரம் குறைத்தல் வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க!
Thursday, November 30th, 2017
ஊழியர்கள் கடமை புரியும் நேரம் குறைக்கப்பட வேண்டும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கோரியுள்ளார்.
அவர் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மனிதஉழைப்பின் நேரம் குறைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இலங்கையில் மட்டும் மனித உழைப்பின் நேரம் மேலும் அதிகரிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியார் துறைகளில் கடமையாற்றும் ஊழியர்கள் ஒன்பது மணிநேரம் வரை பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். அரச ஊழியர்களுக்குஅவ்வாறான நிலை இல்லை இருந்த போதும் அவர்கள் போக்குவரத்தில் கணிசமான நேரம் செலவிட வேண்டியுள்ளது. இதற்குப் பதிலாக ஊழியர்களின் கடமை நேரத்தை 08 மணி நேரத்தில் இருந்து ஆறு மணிநேரமாக குறைக்க வேண்டுமெனவும் உழைப்புக்கேற்ப ஊதியம்அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
|
|
|


