உள்விவகாரங்களில் தலையிட சர்வதேசத்திற்கு இடமில்லை: ரஞ்சித் ஆண்டகை!

Monday, September 4th, 2017

உலகின் எந்தவொரு சக்தியானாலும் எமது நாட்டின்  உள்விவகாரங்களில் தலையிட இடமளிக்கக் கூடாதென மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

பலாங்கொடவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இவ்வா தெரிவித்துள்ளார்.

எமது நாட்டின் வரலாற்றை வெளிநாட்டு சக்திகள் விழிநடத்துவதற்கு இடமளிக்கக் கூடாது இலங்கைக்கு பொருளாதார சாதகத் தன்மைகளை பெற்றுக்கொடுப்பதாக உறுதிமொழிகள் வழங்கப்பட்டு அதனூடாக இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கான முயற்சிகளை சர்வதேச சமூகம் மேற்கொண்டுவருகின்றது,அத்தடன் உணவு உடை போன்ற காரணிகளுக்காக ஆன்மாவை விலைகொடுக்க முடியாது போராடிப் பெறப்பட்ட அரசியல் சுதந்திரம், பொருளாதார சுதந்திம் வரை முன்னேற்றப்பட வேண்டும் என மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

அனைத்து நடவடிக்கையிலும் வெற்றியடைந்துள்ளோம் - கொரோனா தொற்று கட்டுப்படுத்தல் தொடர்பில் இராணுவத் தளப...
மத்திய வங்கியினால் ஏனைய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடைய...
விவசாய நடவடிக்கைகளில் இளைஞர்களை ஈர்க்க அதிரடி நடவடிக்கை - அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் ஆயிரம் மில்லி...