உள்ளூராட்சி மன்ற தேர்தல்  சட்டத்தின் சில அதிகாரங்களில் திருத்தம்!

Friday, May 19th, 2017

உள்ளுராட்சி நிறுவனங்களின் தேர்தல் நடத்தும் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் சில அதிகாரங்கள் திருத்தப்படவுள்ளதாகவும் இதற்குத் தேவையான சட்ட திட்டங்களை வரைய அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உள்ளுராட்சி நிறுவனங்களில் தேர்தல் நடத்தும் கட்டளைச் சட்டம் தொடர்பான திருத்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சரவை உபகுழு மேலும் ஆராய்ந்துள்ளது. இதற்கு தேர்தல் ஆணைக்குழு முன்வைத்த அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டு இறுதி சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியல் அமைப்பை மீறும் வகையில் அமைந்துள்ளதால், இதனை பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மூலம் அங்கீகரிக்க வேண்டுமென சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த அம்சங்கள் தொடர்பில் அதிகாரிகள் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மை மூலம் நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் குறித்த சட்டமூலத்தின் மீதான திருத்தங்களை பாராளுமன்ற குழுநிலை விவாதங்களில் இணைத்துக் கொள்வது பற்றி அமைச்சர் பைசர் முஸ்தபா யோசனை கூறியிருந்தார்.

Related posts: