உள்ளூராட்சி மன்றங்கள்  தொடர்பில் வர்த்தமானி வெளியீடு!

Sunday, November 12th, 2017

உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் வர்த்தமானி நேற்றுமாலை அரச அச்சக அதிபர் கங்கானி கலப்பதியினால் வெளியிடப்பட்டுள்ளது.

தொகுதி மற்றும் விகிதாசார அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பில் இந்த வர்த்தமானியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுவரெலிய, அம்பேகமுவ பிரதேச எல்லைப்பகுதிகள் அமைக்கப்பட்டு நான்கு பிரதேச சபைகளையும் உள்ளடக்கியதாக வர்த்தனமாகி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சா.; பைசர்முஸ்தபாவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலில் உறுப்பினர்களது பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆந் திகதி முதல் நடைமுறைககு;; வருதல் வேணடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.www.documents.gov.lk என்ற இணைய தள முகவரியின் மூலம் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.

இதே வேளை தேர்தலுக்கான வேட்புமனு கோருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம். எம். மொகமட்  தெரிவித்துள்ளார்.

Related posts: