இ.போ.ச. டிப்போக்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது
இ.போ.ச. மீள் கட்டமைப்பின் போது டிப்போக்களின் எண்ணிக்கை ஒருபோதும் குறைக்கப்படமாட்டாது என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்தது.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது மகிந்த ஆதரவு அணி எம்.பி. யான கனக ஹேரத்தினால் எழுப்பப்பட்ட கேள்விக்கே இவ்வாறு பதிலளிக்கப்பட்டுள்ளது.
உத்தேசிக்கப்பட்ட இ.போ.ச. மீள் கட்டமைப்பு மூலம் குறைக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படும் டிப்போக்களின் எண்ணிக்கை என்னவென கனக ஹேரத் எழுப்பிய கேள்விக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் வழங்கிய பதில்:
இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் தற்போது பிரதான டிப்போக்கள் 105, ஆடம்பர போக்குவரத்து சேவை – 1, மத்திய பேருந்து அலுவலகம் – 01, உப டிப்போக்கள் – 17 என மொத்தம் 124 உள்ளன.
மீள் கட்டமைப்பின்படி பிரதான டிப்போக்கள் 59, உப டிப்போக்கள் 59, இரவு நேர நிறுத்துமிடம் 6 என மொத்தம் 124 இருக்கும். ஆகையால் மீள்கட்டமைப்பின் போது டிப்போக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது என்றார்.
Related posts:
|
|
|


