இ.போ.ச ஆசன ஒதுக்கீட்டுக்கான முன்பதிவுக் கட்டணத்தை குறைக்கவும்!

இ.போ.ச பஸ்களில் கைத்தொலைபேசி செயலி ஊடாக ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும்போது சேவைக் கட்டணமாக அறவிடும் கட்டணத்தை குறைக்குமாறு கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட பஸ் பயணிகள் சங்கத்தினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ஆசனங்களை முன்கூட்டியே ஒதுக்கீடு செய்யும்போது 80 ரூபா சேவைக் கட்டணம் அறவிடப்பட்டுள்ளது. எனவே இதனை ஓரளவு குறைக்க வேண்டும் என சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விமுக்தி துஷாந்த கோரியுள்ளார்.
புறக்கோட்டை பஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பில் கொழும்பு மாவட்ட பஸ் பயணிகள் சங்கம் முனவைத்துள்ள கோரிக்கை தொடர்பில் தாம் ஆராய்ந்து பார்ப்பதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
மூச்சு விடுவதில் சிரமம் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையை நாடுங்கள் - மன்னார் மாவட்ட ...
யாழ்ப்பாணத்தில் உச்சம் பெறும் கொரோனா தொற்று – கடந்த 24 மணி நேரத்தில் 116 பேருக்கு தொற்றுறுதி!
நாடுமுழுதும் QR முறைமை அமுலில் - எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இன்மையால் கிராமப்புற மக்கள...
|
|