இலங்கை , மாலைதீவுகளுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் நியமனம்!
Friday, May 25th, 2018
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலெய்னா பீஷ டெப்லிட்ஸ் ஐ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எலெய்னா பீ டெப்லிட்ஸ் தற்போது நேபாளத்திற்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றி வருகின்றார்
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்க தூதுவராக அதுல் கேசாப் தற்போது பதவி வகிக்கின்றார்.
எனினும் குறித்த பரிந்துரையை செனட்சபை உறுதிப்படுத்தினால், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்க தூதுவராக எலெய்னா பீ டெப்லிட்ஸ் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஆட்ட நிர்ணய விவகாரம்: வெளியானது பெயர் விபரங்கள்!
மின் உற்பத்திக்காக 5,800 மெற்றிக் தொன் எரிபொருள் விநியோகம் - பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவிப்பு!
இலாபமீட்டும் துறையாக கடற்றொழில் மாறிவருகிறது - பிரதமர் தினேஸ் குணவர்தன!
|
|
|


