இலங்கை சிறார்கள் தொடர்பில் ஐ.நாவில்  ஆய்வு !

Friday, January 12th, 2018

இந்த மாதம் 15ஆம் 16ஆம் திகதிகளில் ஜெனீவாவில் சிறுவர் உரிமை தொடர்பான ஐ.நா சபையின் குழு இலங்கையில் சிறார்களுக்கு நிலவும் மனித உரிமைகளின் நிலவரங்கள் தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளதாக மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

இந்த குழு 18 சுயாதீன நிபுணர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் சாசனத்தை எந்த வகையில் நாடுகள் அமுலாக்கியுள்ளன என்ற அடிப்படையில் இடம்பெறும் எனவும் இதன்போது இலங்கையின் பிரதிநிதிகளிடம் முறைப்பாடுகள் தொடர்பில் கேள்விகளும் எழுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

22 ஆவது திருத்தச் சட்டத்தை சவாலுக்கு உட்படுத்துவதற்கு மக்களுக்கு தற்போது சந்தர்ப்பம் - அமைச்சர் கலா...
வற் வரி அதிகரிப்பு - பாடசாலை கற்றல் உபகரணங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாயின் அது தொடர்பில் மீள்பரிசீ...
இனிப்புகளை உட்கொள்ளும் போது சுகாதார நிலை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் - மக்களிடம் சுகாதார தி...