22 ஆவது திருத்தச் சட்டத்தை சவாலுக்கு உட்படுத்துவதற்கு மக்களுக்கு தற்போது சந்தர்ப்பம் – அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிப்பு!

Monday, August 15th, 2022

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தசட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை சவாலுக்கு உட்படுத்துவதற்கு மக்களுக்கு தற்போதுசந்தர்ப்பம் உள்ளதாக, அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்தில் பிரச்சினைகள் இருக்குமாயின் உயர் நீதிமன்றத்தை நாட முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

கண்டியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஒன்றின் போதே இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலம் கடந்த பத்தாம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்படி, அன்றிலிருந்து ஏழு தினங்களுக்குள் அதனை சவாலுக்குஉட்படுத்துவதற்கு சந்தர்ப்பம் உள்ளது. அரசியலமைப்பிற்கு பொருத்தமற்ற வகையில் ஏதாவதொருவிடயம் சட்டமூலத்தில் உள்ளீர்க்கப்பட்டிருக்குமாயின் அதனை திருத்திக் கொள்ளவதற்கு தயார் என்றும் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: