இலங்கையிலும் உக்கிரமடையும் கொரோனா வைரஸ் – நோயாளர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இன்றைய தினம் புதிதாக 4 கொரோனா நோயார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இலங்கையில் இதுவரையில் 76 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் முழுமையான குணமடைந்த மூன்று பேர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பண்டிகை காலத்தை முன்னிட்டு மேல் மாகாணம் முடக்கப்படாது - மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்கின்றார் இரா...
கொதலாவலபுர சமாதி பௌத்த மையத்தின் தங்க வேலியுடனான போதி சுவர் பிரதமரினால் திறந்துவைப்பு!
மக்களே இந்த நாட்டின் உரிமையாளர்கள் - இந்தியாவுடன் எமக்கு திருட்டுக் கூட்டில்லை - பெப்ரவரி 8 இல் ஒப...
|
|