இரண்டாண்டுகளில் 583 பேருக்கு வகுப்புத்தடை-அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல

Sunday, November 26th, 2017

2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 583 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 37 மாணவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருவரின் தகுதிநிலை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

சிறி ஜயவர்த்தன பல்கலைக்கழகத்தில் 193 பேரும், பேராதனையில் 105 பேரும், சப்பிரகமுவவில் 83 பேரும், மொரட்டுவையில் 47 பேரும், ருகுனுவில் 43 பேரும், கிழக்கில் 31 பேரும், தென்கிழக்கில் 12 பேரும், இலங்கை பௌத்த, பாளி பல்கலைக்கழகத்தில் 15 பேரும், களனியில் 11 பேரும், யாழில் 9 பேரும், இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தில் 10 பேரும், கொழும்பில் 8 பேரும், சுதேசமருத்துவக் கற்கை நிறுவகத்தில் ஒருவரும், கம்பகா விக்கிரமாரச்சி ஆயுர் வேதக்கற்கை நிறுவகத்தில் 2 பேருமாக மொத்தம் 583 பேர் வகுப்பு தடைக்குள்ளாகியுள்ளனர். மேலும் சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் 17 பேரும், களனியில் 13 பேரும், பேராதனையில் 7 பேருமாக மொத்தம் 37 மாணவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Related posts: