க.பொ.த. பரீட்சை ஆகஸ்ட்டில் – உயர்தரப் பரீட்சை டிசம்பரில் – அமைச்சரவை அனுமதி!

Tuesday, May 4th, 2021

எதிர்வரும் காலங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை ஆகஸ்ட்டிலும், உயர்தரப் பரீட்சையை டிசம்பரில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை நடத்தும் காலப்பகுதியில் திருத்தம் மேற்கொள்ளல் மற்றும் அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்யும் கால இடைவெளியை குறைத்தல் தொடர்பில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்ட்டிருந்தது.

அதற்கமைய, எதிர்வரும் காலங்களில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையை ஆகஸ்ட்டிலும், உயர்தரப் பரீட்சையை டிசம்பரிலும் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் 2020 ஆம் அண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயரதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றைய தினம் (04) வெளியிடப்படவுள்ளதாக பரிட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2020 ஆண்டு ஓகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சை இடம்பெற இருந்த நிலையில் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சைகள் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தன.

இம்முறை உயர்தர பரீட்சையில் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: