இன்புளுவன்சா தொற்று : ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் – சுகாதாரப் பிரிவு!
Tuesday, May 29th, 2018
தற்போது தென்மாகாணத்தில் பரவிவருகின்ற இன்புலென்சா காய்ச்சல், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்று சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய பதில் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் சரத் அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் ஜுன் ஜுலை மாதங்களிலும், பின்னர் டிசம்பர் மாதத்திலும் அதிகமாக பரவுவதும், பின்னர் குறைவடைவதும் வழமையான விடயம்.
அத்துடன் இன்புலென்சா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை, ஏனைய நோயாளர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்குமாறு சகல வைத்தியசாலைகளுக்கும் சுற்றுநிரூபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வெற்றி பெற்றார் கோத்தபாய: இந்தியாவுக்கு நல்லது - சுப்ரமணியன் சுவாமி!
கொரோனா தொற்று: தும்மலின்போது 27 அடி வரைக்கும் பாய்ந்து செல்லும் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
இலங்கை - அவுஸ்திரேலியா இடையே நடைமுறை ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது - வெளிநாட்டு அமைச்சர் தினேஷ...
|
|
|


