இந்திய பிரதமருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறப்பான வரவேற்பு!
Thursday, May 11th, 2017
வெசாக் வைபவத்தில் கலந்துகொள்வதற்காக கட்டுநாயக்க சர்வதே விமான நிலையத்தினை வந்தடைந்த இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு விமானநிலையத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இராணுவ மரியாதையுடனான செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்த அமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விமானநிலையத்தில் விருந்தினர் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.
இந்திய பிரதமரை வரவேற்பதற்காக இலங்கையிலுள்ள இந்திய தூதுவர் , அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா , மலிக் சமர விக்ரம , மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
Related posts:
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்துக்கள் - பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை !
கடவுச்சீட்டு பெறவுள்ள மக்களுக்கான வசதிகளை விரிவுபடுத்தியது குடிவரவு குடியகல்வு திணைக்களம்!
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் - ஜனவரி மாதம்முதல் விண்ணப்பம் கோரப்படவுள்ளதாக நிதி இர...
|
|
|





