இந்திய பிரதமருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறப்பான வரவேற்பு!

Thursday, May 11th, 2017

வெசாக் வைபவத்தில் கலந்துகொள்வதற்காக கட்டுநாயக்க சர்வதே விமான நிலையத்தினை வந்தடைந்த இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு விமானநிலையத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இராணுவ மரியாதையுடனான செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்த அமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விமானநிலையத்தில் விருந்தினர் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.
இந்திய பிரதமரை வரவேற்பதற்காக இலங்கையிலுள்ள இந்திய தூதுவர் , அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா , மலிக் சமர விக்ரம , மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

Related posts:

வடமாகாணத்தில் 12 முதல் 19 வயது பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம் - மாகாண சுகாதார ...
சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகளை இன்றுமுதல் ஆரம்பம் - கொள்கலன்களை பெற்றுக்கொள...
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை விட குறைவான விலைக்கு எரிபொருள் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெர...

நாட்டில் கையிருப்பில் உள்ள அத்தியாவசிய உணவு பொருட்களின் தொகை குறித்து மதிப்பீடு - சந்தை, வணிக மற்றும...
அவசியமாயின் நிபா வைரஸ் பரிசோதனைக்காக என்டிஜன் சோதனைக் கருவிகளை இலங்கைக்கு கொண்டு வர தயார் - சுகாதார...
மொஸ்கோவின் புறநகர் பகுதி அரங்கம் ஒன்றில் ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு - 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்...