இடப்பெயர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் உடன் பதிவுகளை மேற்கொள்ளுங்கள் – தெல்லிப்பழை பிரதேச செயலர்!

வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நீண்டகாலமாக உள்ளக இடப்பெயர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான மக்கள் தொகைக்கணிப்பில் பங்குபற்றுவதற்காக பதிவுகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் ச.சிவஸ்ரீ கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன்படி 31.12.1990 ஆம் அண்டிற்கு முன்னர் இடம்பெயரந்து தற்பொழுது தமது பூர்விக இடங்களிற்கு மீளக்குடியமர விருப்பம் உடைய குடும்பங்கள் மற்றும் தற்பொழுது தமது சொந்த இடங்களுக்கு திரும்பி சென்றுள்ள நிலையில் நிரந்தரமாக மீளக்குடியேறுவதற்கான வசதி வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளாத குடும்பங்கள் தமது பதிவுகளை தங்கள் பிரிவு கிராம மட்ட உத்தியோகத்தர்கள் ஊடாக பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்பதுடன் அவை தொடர்பான படிவங்கள் யாவும் சகல கிராம மட்ட உத்தியோகத்தர்களிற்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நேரடியாக இப் பதிவுகளை கிராம மட்ட உத்தியோகத்தர்கள் ஊடாக மேற்கொள்ள முடியும் என்பதுடன் இப் பதிவுகளை மேற்கொள்வதற்கு இதுவே இறுதி சந்தர்ப்பம் என்பதால் இச் சந்தர்ப்பத்தினை உரிய முறையில் பயன்படுத்துமாறு பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ கேட்டுக் கொண்டுள்ளார்.
Related posts:
|
|