உலக நாடுகள் மத்தியில் இலங்கை மீதான நம்பிக்கை உறுதியாகியுள்ளது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Monday, March 27th, 2023

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன இலங்கைக்கான கடனை வழங்குவது ஏனைய நாடுகள் மத்தியில் இலங்கை தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவான்வெல்ல பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கடனை மீள செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதியுடன் வெளிநாட்டு கடனை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு பின்னர் இலங்கைக்கு முதலாம் கட்ட நிதி கிடைக்கப்பெற்றிருந்தது.

இதன்பின்னர், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன 7 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கைக்கு விரைவில் வழங்கவுள்ளன.

இது இலங்கை மீது ஏனைய நாடுகளுக்கு மீள நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டடிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - மட்டக்களப்பில் தெரிவுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணை வழங...
தேசிய கடன் மறுசீரமைப்பு யோசனையை எந்தவொரு நீதிமன்றத்திலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது - சபாநாயகர் ...
பாடசாலைகளில் பாலியல் கல்வி - கல்வி சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரே...