ஆர்ப்பாட்டங்களை தடுக்க பொலிஸ் மோப்ப நாய்கள்!
Monday, December 4th, 2017
போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தடுத்து நிறுத்த பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்த பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்கு கலகத் தடுப்புப் பொலிஸ் பிரிவினருடன் இணைந்து செயற்படுவது குறித்து பொலிஸ் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது.
இதற்கென ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸின் இரண்டு அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களின் போது பொலிஸார் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதனை தடுக்கவும், நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் பொலிஸ் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலத்திரனியல் ரயில் பயணச்சீட்டுக்கள் இந்த வருடத்திற்குள் அறிமுகம்!
எரிவாயு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எரிவாயு பகிர்ந்தளிப்பு - லாஃப் நிறுவனம் அறிவிப்பு!
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு - இலங்கையில் எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய துக்க தினதை...
|
|
|


