அரியாலை இளைஞன்  படுகொலை – ஆதாரங்கள் மீட்பு!

Wednesday, November 1st, 2017

அரியாலை, மணியம்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.குறித்த துப்பாக்கி மற்றும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன யாழ். பண்ணை வீதியில் உள்ள விசேட அதிரடிப் படை முகாமில் இருந்து நேற்று இரவு (31.10) மீட்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 22ஆம் திகதி யாழ். அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன்பொஸ்கோ ரிக்மன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டிருந்தனர்.இதன்போது, சம்பவ வலயத்தில் இருந்து சி.சி.ரி.வி காணொளிகள் பெறப்பட்ட நிலையில், அந்த காணொளிகளின் ஊடாக துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை புரிந்தவர்கள் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினர் என தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அரசாங்கம் சரியான தீர்மானத்தை எடுக்கும்போது அரச நிறுவனங்களும் அந்தக் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்ட...
தாமரை மொட்டின் மூலம் யானையொனறு வீழ்த்தப்பட்டுள்ளது – பெரமுனவின் வெற்றியை பாராட்டும் சர்வதேச ஊடகங்கள்...
சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க நடவடிக்கை - நீதிச் சேவை ஆணைக்குழு...