அரச விடுமுறையாக மே 7ஆம் திகதி: அரசாங்கம் அறிவிப்பு!

Wednesday, May 2nd, 2018

உலக உழைப்பாளர் தினத்தை கொண்டாடுவதற்கான தினமாக மே மாதம் 7 ஆம் திகதி திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அன்றையதினமே அதற்கான  அரச வங்கி விடுமுறை தினம் என்றும்  அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2018 ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி முதல் 2018 மே மாதம் 2ஆம் திகதி வரை தேசிய வெசாக் வாரம் இடம்பெறும் நிலையில் உலகத்தொழிலாளர் தினம் 2018 மே மாதம் 1ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

மே மாதம் முதலாம் திகதி இடம்பெறும் அரச மற்றும் வங்கி விடுமுறைதினம் இரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக 2018 மே தினத்தை கொண்டாடுவதற்காக 2018 மே மாதம் 7 ஆம் திகதிதிங்கட்கிழமை அரச மற்றும் வங்கி விடுமுறையாக வேண்டும்.

1971ஆம் ஆண்டு இலக்கம் 29இன் கீழான விடுமுறை சட்டத்தின் 10 (1)(ஆ) சரத்து மற்றும் 11 (1)(ஆ) சரத்திற்கு அமைவாக தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக உள்நாட்டலுவல்கள்அமைச்சர் வஜிர அபயவர்த்தனவினால் 2018 ஏப்ரல் 6ஆம் திகதி வர்த்தமானி மூலம் இதற்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பிரகடனத்திற்கு அமைவாக உலக தொழிலாளர் தினமான 2018 மேமாதம் 1 ஆம் திகதி இடம்பெறவிருந்த அரச மற்றும் வங்கி விடுமுறை இரத்தாகின்றது. இதற்குப் பதிலாக 2018 ஆம்ஆண்டு மே தினத்தை கொண்டாடுவதற்காக எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை அரச மற்றும் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தொழில்கொள்வோரும் தமக்கு உட்பட்ட ஊழியர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் 1971 இலக்கம் 29 என்ற விடுமுறை சட்டத்தின் கீழ் உள்ள அரசாங்கத்தின் விடுமுறை நாளுக்கானசம்பளத்துடன் விடுமுறை தினம் என்ற ரீதியில் வழங்கவேண்டும்.

மே தினம் இதில் ஒரு விடுமுறைதினமாகும். அத்தோடு இதனால் மேலே குறிப்பிடப்பட்ட மாற்றம் வர்த்தக விடுமுறைக்கும் பொருத்தமானதாகும்.

Related posts:


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெளியேறல் பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது - வீதி அபிவிருத்...
சிறியளவில் வேலை செய்து கொண்டிருப்பதா அல்லது மீண்டும் நாட்டை மூடி வைப்பதா என்பதை மக்களே தீர்மானிக்க வ...
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் ஆரம்பம் - இந்திய தரப்பினர் சிலரும் பங்கேற்பு என தகவல்!