அரச நிறுவனங்களை மறுசீரமைக்க விசேட பிரிவை நிறுவ அமைச்சரவை அனுமதி!
Wednesday, January 4th, 2023
அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக விசேட பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்துடன் குறித்த பிரிவு திறைசேரியின் கீழ் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
திறைசேரியின் செயலாளர் பிரிவின் அனைத்து பங்குகளையும் சொந்தமாக வைத்திருப்பார்.
அமைச்சரவைப் பத்திரத்தின்படி, மறுசீரமைக்கப்படும் அரச நிறுவனங்கள் இந்தப் பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது
Related posts:
நட்சத்திர ஹோட்டல்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!
தென்னிலங்கையில் கோர விபத்து: மூவர் பலி!
இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு ஏப்ரல் மாதம் 9.6 வீதத்தால் அதிகரிப்பு - மத்திய வங்கி தகவல்!
|
|
|


