அரசுக்கு நெருக்கடி – பதவி விலகுவதாக அறிவித்த மகிந்த?

இலங்கைத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தனது பதவியில் இருந்து விலகுவதற்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாது போனால், பதவியில் இருந்து விலகி விடுவேன் என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.மேலும் மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளில் தேர்தலை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நடத்த முடியும் எனக் கூறியிருந்தார்.இதேவேளை, உள்ளூராட்சி சபை தேர்தலை விரைவில் நடத்த கோரி பல்வேறு தரப்பினர்களும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், தேர்தல் ஆணைக்குழு தலைவரின் இந்த அறிவிப்பு அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|