அரசின் அலட்சியத்தினால் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு பூட்டு!
Wednesday, May 23rd, 2018
தீப்பெட்டிகளது உற்பத்திக்கு தேவையான மருந்துகள் இல்லாமையினால், இன்று(23) தீப்பெட்டித் தொழிற்சாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பான தீப்பெட்டிகள் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் தலையிட்டு இதற்குத் தேவையான மருந்துகளை சரியான முறையில் கொண்டு வராமைக் காரணமாகவே குறித்த இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
தீப்பெட்டி மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டவுடன், அரசு மருந்துப் பொருட்களைக் கொண்டு வந்து தருவதாக குறிப்பிட்டிருந்த நிலையில், இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென்றும், இதனால் நாட்டில் தீப்பெட்டி பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க முடியாதென்றும் குறித்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை- அலிஸ் ஜி வெல்ஸ்!
தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய செய்தி!
அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கு டெங்கு நோயின் தாக்கமும் இலங்கையில் உச்சம் பெறும் – எச்சரிக்கை விடுக...
|
|
|


