அடுத்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சர் சமர்ப்பிப்பு!

Monday, October 9th, 2017

வரும் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன நாடாளுன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

வரவு செலவு திட்டம் முன்வைப்புக்கு முன்னதாக, அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடு இந்த சட்டமூலத்தின் ஊடாக கோரப்படும். நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் அரச செலவீனம் 3982 பில்லியன் ரூபாய் ஆகவும் அரச வருமானம் ஏறக்குறைய 2175 பில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, தேசிய பாதுகாப்பிற்காக, 29 ஆயிரத்து 71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த படியாக நிதி மற்றும் ஊடக அமைச்சிற்கு 22 ஆயிரத்து 757 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சிற்கு 10 ஆயிரத்து 288 கோடி ரூபாய்கள் ஒதுக்கிடப்பட்டுள்ளன. இதேவேளை, சுகாதார அமைச்சிற்கு 17 ஆயிரத்து 839 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Related posts: