அச்சுறுத்தல் விடுத்தது நிரூபிக்கப்பட்டால் உறுப்புரிமையிலிருந்து விலகத் தயார் – அமைச்சர்  ரவி!

Thursday, November 9th, 2017

இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரத்தில் சாட்சி வழங்கிய பெந்தௌஸ் குடியிருப்பின் தலைவர் அனிகா விஜேசூரியவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இன்னும், குறித்த கொலை அச்சுறுத்தலுடன் தனக்கு தொடர்புண்டு என நிரூபிக்கப்பட்டால் தனது அமைச்சுப் பதவியினை இராஜினாமா செய்தது போன்று நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்யத் தயார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு - தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் மீற முடியாது - அமைச்ச...
நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்யுங்கள் - மின் நெருக்கடி தொடர்பில் மின்சக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி கோட்...
பொலிஸ் உத்தியோகத்தர்கள் சொந்த ஊரில் கடமையில் ஈடுபட முடியாது - பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ...

பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தம் - மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடி...
புனர்வாழ்வு மையங்களுக்கு போதைப்பொருட்களை அறிமுகப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு கடும் தண்டனை!
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரம் - மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா அறிவிப்பு!