தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியவற்றை நடைமுறையில் செயற்படுத்திக் காட்டுவோம் -ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட  மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்!

Thursday, April 19th, 2018

தீவகத்தின் வேலணை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபைகளை ஏனைய சபைகளுக்கு முன்மாதிரியான சபைகளாக செயற்படுத்திக் காட்டுவதுடன் நாம் உள்ளூராட்சி தேர்தல் கால விஞ்ஞாபனத்தில் கூறியவற்றையும் முடியுமானவகையில் நடைமுறையில் செயற்படுத்திக் காட்டுவோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட  மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

உள்ளூராடசி சபை தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டிருந்தன.

அந்தவகையில்தான் நாமும் மூன்று முக்கிய விடயங்களை முன்னிறுத்தியதாக எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை “மக்களின் அன்றாட பிரச்சினைக்கான தீர்வு” அபிவிருத்தி மற்றும் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு” போன்ற விடயங்களை முன்னிறுத்தி எமது விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் தேர்தல் முடிவுற்று சபைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நாம் எதிர்பார்த்த வெற்றி எமக்கு கிடைக்காதுவிடத்தும் எமது அனுபவங்களினூடாக  எமது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ஏற்ப நிச்சயம் அதை செயற்படுத்தி காட்டுவோம் என்றும் தெரிவித்தார்.

Related posts:

ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் நல்லூர் பிரதேசத்தில் சுய தொழிலுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!
நுண் கடன் திட்டத்துக்கு வேலணையில் தடை : மத்திய வங்கியின் ஆளுநருக்கு பிரதேச சபையால் பரிந்­து­ரை - தவி...
வலிகாமம் தெற்கு முன்பள்ளிகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!

அமைச்சர் விடயம் தொடர்பில் ஆராய்பவர்கள் மக்கள் பிரச்சினை தொடர்பில் ஏன் ஆராயவில்லை - ஈ.பி.டி.பியின் ...
தீவகப்பகுதி மக்களின் முழுமையான வாக்குப் பலத்துடன் ஈ.பி.டி.பி தனது அரசியல் பலத்தை வென்றெடுக்கும் – வே...
ஐ.நா தொடர்பில் ஈ.பி.டி.பி கூறிவந்த நிலைப்பாட்டையே இன்று இதர தமிழ் கட்சிகளும் ஏற்றுள்ளன – முன்னாள் தவ...