நுண் கடன் திட்டத்துக்கு வேலணையில் தடை : மத்திய வங்கியின் ஆளுநருக்கு பிரதேச சபையால் பரிந்­து­ரை – தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவிப்பு!

Friday, September 28th, 2018

கடன் திட்­டம் என்­னும் பெய­ரி­ல் மக்­களது வாழ்வுக்கு குந்­த­க­மாக அமை­யும் நுண் கடன் திட்டத்தை தடை செய்­யு­ம் தீர்மானம் வேலணை பிரதேச சபையால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் தவிசாளர் கரணாகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதன்போதே குறித்த விடயம் விவாதத்திற்கெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பில் மேலும் அவர் தெரியவருவதாவது –

கடன் திட்­டம் என்­னும் பெய­ரி­ல் நுண்கடன் திட்டம் வேலணை பிரதேச மக்களின் வாழ்வை சிதைத்து வருகின்றது. இதனால் பல வழிகளிலும் துன்பங்களை சந்தித்து வாழ்ந்துவரும் எமது மக்கள் மேலும் சொல்லணா துயரத்தை சந்திக்க நேரிடுகின்றது.

இதனால் நுண்கடன் திட்டத்தை வேலணை பிரதேசத்தில் இருந்து முற்றாக தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை பலதரப்பட்டவர்களிடமிருந்தும் முன்வைக்கப்பட்டு வந்தது.

இதன்பிரகாரம் இன்றையதினம் குறித்த விடயம் சபையின் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து சபை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியதுடன் தடை செய்­யு­ம் தீர்மானத்தை மத்திய வங்கியின் ஆளுநருக்கு வேலணை பிரதேச சபை பரிந்­து­ரைத்­துள்­ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: