திருமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை, தம்பலகாமம் பிரதேச சபை ஆகியவற்றிற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வேட்புமனு தாக்கல்!
Wednesday, December 13th, 2017
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் மற்றும் திருகோணமலை நகரம் சூழலும் ஆகிய பிரதேச சபைகளுக்கு போட்டியிடும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.
திருகோணமலை மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தலைமையில் கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின், கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் தங்கராசா புஸ்பராசா மற்றும் கட்சியின் உப்புவெளிப் பிரதேச நிர்வாகச் செயலாளர் நகுலன் ஆகியோரால் வேட்புமனு இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் குறித்த பிரதேச சபைக்களுக்கான கட்டுப்பணத்தை கடந்த மாதம் 29 ஆம் திகதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செலுத்தியிருந்தது.
இந்த நிலையில் குறித்த பிரதேச சபைகளின் வேட்புமனு வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் சகிதம் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|





