தமிழரசுக் கட்சி  இன்று காற்றுப்போய்விட்டது – மண்டைதீவு கடற்றொழிலாழர் சங்கப் பிரதிநிதி சூசைதாஸ்!

Sunday, January 28th, 2018

தமிழரசுக் கட்சி உள்ளடங்கலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது காற்றுப்போன கட்சியாகவே உள்ளது என மண்டைதீவு கடற்றொழிலாழர் சங்கப் பிரதிநிதி சூசைதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்ட மண்டைதீவு மத்தி பகுதியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

முன்னொருகாலத்தில் நாம் தமிழரசுக் கட்சியையே எமது பிரதான கட்சியாக ஏற்றுக்கொண்டு ஆதரித்துவந்திருந்தோம். ஆனால் இன்று அந்தக் கட்சியை தூக்கி எறிந்துவிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு எமது முழுமையான ஆதரவை தெரிவித்து வருகின்றோம்.

அதுமாத்திரமன்றி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை வெற்றிபெறச் செய்து அதனூடாக எமது பகுதியின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கும் எண்ணியுள்ளோம்.

நாம் முன்னர் ஆதரித்த தமிழரசுக் கட்சியாக இருந்தாலென்ன தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலென்ன அவர்கள் தமது சுயநலன்களுக்காகவே அரசியலில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மக்களுடன் இருந்து மக்களுக்காக பெரும் பணிகளை மேற்கொண்டுவருதை நாம் நாளாந்தம் காண்கின்றோம்.

இன்று தமிழரசு கட்சியிடமும் அதன் பங்காளிகள் இணைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடமும் மதக் கொள்கையும் சாதிக் கொள்கையும் முதன்மையானதாக இருக்கின்றது. இந்த நிலையில்தான் அந்தக் கட்சிக்கான ஆதரவை நாம் விலக்கியுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரித்துள்ளார்.

Related posts: